தமிழ்நாடு

tamil nadu

Sexual harassment: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கார் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

By

Published : Dec 23, 2021, 7:55 PM IST

Sexual harassment: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

விருதுநகர்:Sexual harassment:ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர், கருப்பசாமி. இவரது மகன் வினீஸ்குமார் (27). இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று, இரவு 12 மணிக்கு 10ஆவது படிக்கும் மாணவி ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர், வினீஸ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன், ஓட்டுநர் வினீஸ் குமாருக்கு சாகும்வரை சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.

வினீஸ் குமாருக்கு 342 பிரிவின்கீழ், ஓர் ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே வினீஸ் குமார், தனக்கு விதிக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் அபராதத் தொகையை செலுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வாகன தணிக்கையில் இருந்த எஸ்ஐ மீது காரைவிட்டு மோதிய கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details