தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் குல தெய்வக் கோயிலில் கும்பாபிஷேக விழா!

By

Published : Aug 28, 2020, 8:53 PM IST

விருதுநகர் : தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குல தெய்வக் கோயிலான தவசிலிங்கசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா அவரது தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அவரது குல தெய்வ கோவிலில் கும்பாபிஷேக விழா
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அவரது குல தெய்வ கோவிலில் கும்பாபிஷேக விழா

விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டியில் தவசிலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குடும்பத்தின் குல தெய்வக் கோயில் ஆகும்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமையில் இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை, முதல்கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடைசி கட்ட மாபெரும் யாகசாலை பூஜை நேற்று (ஆக. 27)இரவு நடைபெற்றது. இன்று (ஆக. 28) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் அதிமுக கழக நிர்வாகிகளும், ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details