தமிழ்நாடு

tamil nadu

இரண்டு துண்டான பாஜக கொடி கம்பம்

By

Published : Sep 26, 2020, 10:04 AM IST

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பாஜகவின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

கொடிக்கம்பம் சேதம்
கொடிக்கம்பம் சேதம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாளையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கொடியேற்றினர்.

அதேபோல பெரியபுளியம்பட்டி, வெள்ளையாபுரம் பகுதியில் கடந்த வாரம் பாஜக தொண்டர்கள் சார்பாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.

அந்த கொடிக்கம்பம் தற்போது இரண்டாக வெட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜகவினர் கொடிக்கம்பத்தை இரண்டு துண்டாக வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details