தமிழ்நாடு

tamil nadu

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த 5 பேர் கைது!

By

Published : Nov 20, 2020, 5:42 PM IST

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை உள்பட 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் பெண் உள்பட 5 பேரை நகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நகை பறிப்பு
நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ்நகரில் கடந்த 10ஆம் தேதி அழைப்பிதழ் கொடுப்பதுபோல் வந்து வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபா என்ற பெண்ணை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை, பீரோவில் இருந்த நகைகள் என 35 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமாரா காட்சிகளை ஆராய்ந்ததில் நேரு நகரைச் சேர்ந்த கணேஷ்குமார் (24) என்பவர் கொள்ளை நடந்த பகுதியைச் சுற்றி கொள்ளை சம்பவத்திற்கு முன் சந்தேகபடும்படியாக சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை தேடிப்பிடித்து கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இந்தக் கொள்ளைச் சம்பவதிற்கு ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளக்கோட்டையைச் சேர்ந்த அருண்பாண்டி (24), அபிராமத்தைச் சேர்ந்த சோலைச்சாமி (21), மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த ஹரிஹரன் (20), ஜெபகிருபாவின் தோழியான முத்துச்செல்வி (24) ஆகியோரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்துச்செல்விக்கு பணத்தேவை இருந்துள்ளது என்ன செய்வதென்று தவித்துக்கொண்டிருக்கும் போது தான் ஜெபகிருபா வங்கியில் அடகுவைத்த நகைகளை மீட்டு வந்ததை தோழி என்று நினைத்து முத்துச்செல்வியிடம் கூறியுள்ளார்.

அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்து தன் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள வேண்டும் என எண்ணிய முத்துலட்சுமி தன்னுடைய ஆண் நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி, ஹரிஹரன் ஆகியோரை மூளைச்சலவை செய்து தன் கொள்ளை திட்டத்திற்கு பயன்படுத்தி யாரும் இல்லாத நேரம் அவர்களை ஜெபகிருபாவின் வீட்டிற்கு வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளை அடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்துச்சென்ற நகைகளையும் பறிமுதல் செய்ததோடு கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல்செய்தனர். தோழி என்ற நினைத்த பெண் கொள்ளைக்காரியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details