தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பால் நொதிப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை - அமைச்சர் தகவல்

By

Published : Nov 7, 2020, 10:16 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் நொதிப் பொருள்கள் தயாரிக்கும் ஆலையை தொடங்க நடவடிக்கை எடுத்துவருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

Minister
Minister

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பால்வளத் துறை சார்பில் ஆவின் பால் உற்பத்தி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆவின் மேலாண்மை இயக்குநர் வள்ளலார், மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஆவின் பால் உற்பத்தி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுசெய்த அமைச்சர், சிவகாசி வட்டத்திற்குள்பட்ட ஈஞ்சார் கிராமத்தில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் 70 கோடி மதிப்பீட்டில் புதிதாக மிக அதிக வெப்ப பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் மிக அதி உயர்வு பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்கும் ஆலை மூலமாகத் தயாரிக்கப்படும் ஆவின் பால் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் நொதி உபபொருள்கள் தயார் செய்யும் ஆலை (10000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பால் பண்ணை வளாகத்தில் ரூ.10.90 கோடி மதிப்பீட்டில் பால் பொருள்களான வெண்ணெய், நெய், குலோப்ஜாமூன், பாதாம் மில்க், பன்னீர் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன். மேலும் விருதுநகர் பால் குளிர்விப்பான் நிலையத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன்கொண்ட கால்நடை கலப்பு தீவன ஆலை அமைய உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் விற்பனையைப் பெருக்கும்வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details