தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரம்: அதிமுகவின் முதல் எம்எல்ஏ காலமானார்!

By

Published : Jun 27, 2020, 10:25 PM IST

விழுப்புரம்: அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் த. கிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

விழுப்புரம்: அதிமுகவின் முதல் எம்எல்ஏ காலமானார்!
விழுப்புரம்: அதிமுகவின் முதல் எம்எல்ஏ காலமானார்!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், விழுப்புரம் தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டு 1977ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் த. கிருஷ்ணன். 86 வயதான இவர் கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று மாலை கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் முதல் முறையாக வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details