தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்தில் 8,700 ஓட்டுநர்கள், 8,400 நடத்துநர்களுக்கு முகக்கவசம்

By

Published : Mar 21, 2020, 8:41 AM IST

விழுப்புரம்: போக்குவரத்துக் கழகம் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக எட்டாயிரத்து 700 ஓட்டுநர்கள், எட்டாயிரத்து 400 நடத்துநர்களுக்கு முகக்கவசங்கள், சோப்புகள் வழங்கப்பட்டன.

transport-corporation-face-mask
transport-corporation-face-mask

தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பேருந்துகளை முறையாகப் பராமரித்து தூய்மையாக வைக்க போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், அனைத்துப் பணிமனைகளின் பேருந்துகளில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதைத்தொடர்ந்து, விழுப்புரம் கோட்டம் போக்குவரத்துக் கோட்டத்தில் மொத்தம் உள்ள எட்டாயிரத்து 700 ஓட்டுநர்கள், எட்டாயிரத்து 400 நடத்துநர்களுக்கு ஒரு ஜோடி முகக்கவசங்கள், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகையில் சோப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மேலாண் இயக்குநர் இரா. முத்துகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: 14ஆவது ஊதியக்குழு ஒப்பந்தம் குறித்த கூட்டம் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details