தமிழ்நாடு

tamil nadu

திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் வாழ்த்து!

By

Published : Nov 13, 2020, 7:24 AM IST

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள க. பொன்முடியை நேரில் சந்தித்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.

narayanasamy meet ponmudi
narayanasamy meet ponmudi

விழுப்புரம் : திமுகவின் பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் நடந்தது.

இந்த கூட்டத்தில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர், க.பொன்முடி மற்றும் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக துணைப் பொதுச்செயலாளர், க.பொன்முடியை, விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க:கவுன்ட் டவுன் மணியோசை கேட்கவில்லையா? மு.க. ஸ்டாலின் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details