தமிழ்நாடு

tamil nadu

'இட ஒதுக்கீடு குறித்து நாளை பதில் கூறுகிறேன்' - ராமதாஸ்

By

Published : Apr 6, 2021, 10:27 AM IST

Updated : Apr 6, 2021, 11:16 AM IST

விழுப்புரம்: இட ஒதுக்கீடு குறித்து நாளை பதில் கூறுகிறேன் என வாக்களித்தபின் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

ட்ஃப்ச்
ட்ச

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் காலை தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கினைப் பதிவுசெய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது கருத்துக் கணிப்பு அனைத்தும் திமுகவிற்குச் சாதகமாக வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், கருத்துக் கணிப்பு அல்ல; அது கருத்துத் திணிப்பு. இன்று அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றார்.

வாக்கு செலுத்தும் ராமதாஸ்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, 'தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுகிறது. ஸ்டாலின் பரப்புரை ஒன்றும் பெரிய விஷயம் இல்லை' என்றவரிடம், இட ஒதுக்கீடு தற்காலிகம் எனக் கூறிவருவது குறித்து கேட்டதற்கு, இடஒதுக்கீடு குறித்து உங்களுக்கு நாளை பதில் சொல்கிறேன் என்றார்.

Last Updated :Apr 6, 2021, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details