தமிழ்நாடு

tamil nadu

காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

By

Published : Jun 26, 2019, 7:37 PM IST

விழுப்புரம்: காவல்துறை சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Helmat Awarness programme

ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் போதைப் பொருளால் ஏற்படும் நோய்கள் குறித்தும், உயிர் சேதங்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து தலைக்கவசம் உயிர்கவசம் மட்டுமல்ல; எதிர்கால தலைமுறைக்கான உயரிய கவசம் என்பதை வலியுறுத்தி, ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Intro:விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.Body:ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையடுத்து இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் போதைப் பொருளால் ஏற்படும் நோய்கள் குறித்தும், உயிர் சேதங்கள் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த பேரணியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Conclusion:அதைதொடர்ந்து தலைக்கவசம் உயிர்கவசம் மட்டுமல்ல; எதிர்கால தலைமுறைக்கான உயரிய கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த ஊர்வலத்தை விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் காவல் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details