தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தின் இரண்டாம் புலிகேசி அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு - சிவி சண்முகம் குற்றச்சாட்டு

By

Published : May 19, 2023, 11:04 PM IST

தமிழகத்தின் இரண்டாம் புலிகேசி அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு - சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் இரண்டாம் புலிகேசி அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் இரண்டாம் புலிகேசி அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் இரண்டாம் புலிகேசி அரசு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

விழுப்புரம்:சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைபெற உள்ள பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்தக் கூட்டம் விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று (மே 19) நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “விழுப்புரம், செங்கல்பட்டு, தாண்டி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் கூலி தொழிலாளிகளை தான் கைது செய்துள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய அவர் திண்டிவனத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் சாராயம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுகிறார்,

ஆனால் கட்சியிலிருந்து ஏன் நீக்கப்படவில்லை. தமிழகதில் சாராயம், கஞ்சா வியாபார சாம்ராஜியம் விரிவடைந்துள்ளது. தமிழகத்தில் நிர்வாக திறமையற்று ஆள தெரியாத முதல்வராக ஸ்டாலின் நடந்து கொள்கிறார். என்ன நடக்கிறது என்று தெரிகிறதா தெரியவில்லையா என தெரியவில்லை” என தன் கண்டனங்களை தெரிவித்தார். பின்னர், “விற்பனை செய்யப்பட்டது கள்ளச்சாரயம் இல்லை மெத்தனால் கலந்த விஷ சாரயம் என தமிழக காவல்துறையின் தலைவர் டிஜிபி ஒரு விளக்கதை கொடுக்கிறார். மெத்தனால் குறித்த கண்காணிப்பு இல்லை என்றும் மெத்தனால் சாராயத்தினை 2ம் புலிகேசி போல கண்டு பிடித்துள்ளது ஸ்டாலின் ஆட்சி.

கள்ளச்சாரயத்தை தடுக்காத தமிழக அரசின் அனுமதியோடு சாராயத்தை விற்பனை செய்வதாகவும் விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சனை 2 மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காத அமைச்சர் பொன்முடி, கள்ளச்சாராயம் விவகாரத்தில் பிரச்சனையை திசை திருப்ப திட்டமிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு நாடக அரசு என்றும் அதில் முதல்வர் நாடக நடிகர் என்றும் 22 பேர் மரணமடைந்தும் தமிழக அரசு விழித்துக்கொள்ளவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்தினால் பங்கேற்க தயார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு வரவேற்கதக்க நிகழ்வு எனத் தெரிவித்தார். நீட் தேர்வு என்பது இந்த ஆட்சியின் ஸ்டாலினின் மோசமான வாக்குறுதி. மாணவர்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் ஸ்டாலின், உதயநிதி தான். மூன்றாமாண்டில் உள்ள திமுக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் திமுக குடும்பமே பித்தலாட்ட, மோசடி குடும்பம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஜல்லிகட்டு தீர்ப்பு எங்களால் தான் வந்தது என மார்த்தட்டிக்கொள்ளும் ஸ்டாலின், திமுகவினர் குண்டர்களை விட்டு ஜல்லிக்கடு போராட்டத்தில் கலவரத்தை உருவாக்கினார்கள். மக்களை ஏமாளிகள் என கருதி நீட் தேர்வில் சிவில் வழக்கினை திமுகவினர் தொடர்ந்துள்ளதாகவும் மாணவர்களை ஏமாற்றுகிற அரசாக திமுக உள்ளது. தமிழக ஆளுநர் கள்ளச்சாராய உயிரிழப்பிற்கான உரிய அறிக்கை கேட்டதற்கு இதுவரை எந்த ஒரு விளக்கமும் தராமலும் என்ன கொடுப்பதென்று தெரியாத அரசாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உள்ளது” என வன்மையாக திமுக அரசை சாடினார்.

இதையும் படிங்க:அலட்சியத்தால் உயிரிழந்த முதியவர் : ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி ஆட்சியர் முற்றுகை

ABOUT THE AUTHOR

...view details