தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

By

Published : Mar 16, 2021, 9:06 PM IST

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில், கள்ளக்குறிச்சி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை, சி.வி.சண்முகம் அறிமுகம் செய்துவைத்தார்.

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் பேசுகையில், "தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு பணியாற்றுபவர்கள்தான் அதிமுகவின் உண்மையான விசுவாசி. மற்றவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதி. அதிமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அயராது உழைத்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும்” என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு, அதிமுக கழக அமைப்பு செயலாளர் ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு மற்றும் அதிமுக, பாஜக, பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:வா வா ஏரியாக்கு வா... டிடிவி தினகரனை ஆர்.கே. நகருக்கு அழைத்த அதிமுக வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details