தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்!

By

Published : Dec 15, 2022, 2:28 PM IST

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நாளை நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்

விழுப்புரம்:மாற்றுத்திறனாளிகள் குறைகளை களைந்திடும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை (டிச.16) மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. காலை 10 மணி அளவில், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்து பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்) மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு குறைதீர் முகாமை பயன்படுத்தி பயனடைந்திட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் ஐஏஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள்; ஐஐடி மெட்ராஸால் நிகழ்ந்த நன்மை

ABOUT THE AUTHOR

...view details