தமிழ்நாடு

tamil nadu

ஸ்கூலுக்கு லீவு போட புதிய ரூட்டு - விழுப்புரம் சிறுவனின் வைரல் வீடியோ!

By

Published : Nov 5, 2022, 3:33 PM IST

விழுப்புரம் அருகே "ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்னை விடுங்க" என அழுத சிறுவனை அவனது தாயார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பள்ளியில் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்கூலுக்கு லீவு போட புதிய ரூட்டு - விழுப்புரம் சிறுவனின் வைரல் வீடியோ!
ஸ்கூலுக்கு லீவு போட புதிய ரூட்டு - விழுப்புரம் சிறுவனின் வைரல் வீடியோ!

விழுப்புரம்:மாவட்டத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு மாணவர்கள் மழையால் பாதிப்பு அடையக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மோகன் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தார்.

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் ஏமப்பூர் கிராம பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளி செல்ல மறுத்து மண் தரையில் அழுதுப் புரண்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

ஸ்கூலுக்கு லீவு போட புதிய ரூட்டு - விழுப்புரம் சிறுவனின் வைரல் வீடியோ!

அப்போது "நீ என்னதான் அழுது புரண்டாலும் உன்னை பள்ளிக்கு கட்டாயம் அனுப்புவேன்" என்று சிறுவனின் தாய் சாந்தி அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் மாணவனை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முதலில் கலப்படம் இல்லாத பால் கொடுங்க: தமிழக அரசை விளாசிய கிருஷ்ணசாமி!

ABOUT THE AUTHOR

...view details