தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

By

Published : Dec 13, 2022, 7:51 AM IST

Updated : Dec 13, 2022, 12:10 PM IST

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

விழுப்புரம்: தொடர்மழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று(டிசம்பர் 13) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியர் மோகன் விடுத்துள்ள அறிவிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் இன்று(13.12.2022) தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி கட்டிடங்களின் நிலைத்தன்மை,பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியில் உள்ள கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல்,மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழ்நிலைகளை உறுதி செய்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளிவளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள் நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாமிக்கு பிடிக்கும் குடை துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டதா? - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

Last Updated : Dec 13, 2022, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details