தமிழ்நாடு

tamil nadu

கழிவுநீர் கால்வாயில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!

By

Published : Jan 2, 2020, 7:40 PM IST

வேலூர்: கழிவுநீர் கால்வாயில் உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்ததால் தோட்டப்பாளையம் மக்களிடையே பரபரப்பு நிலவிவருகிறது.

women body
women body

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், உயிரிழந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் காவலர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

காழிவு நீர் கால்வாயில் பெண் சடலம் மீட்பு

இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வேலூர் புதுவசூர் அருகே கல்குவாரியில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அந்த பெண்ணின் காதலனே பாறையில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் வேலூர் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசலை எவ்வாறு குறைக்கலாம்?

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் கழிவுநீர் கால்வாயில் சடலமாக கிடந்த பெண் ; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் தீவிர விசாரணை
Body:வேலூர் மாவட்டம் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் இரண்டு நாளைக்கு முன்பே உயரிழந்து உடல் ஊதிய நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்த்தது். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் உயிரிழந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு வேலூர் புதுவசூர் அருகே கல்குவாரியில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அந்த பெண்ணின் காதலனே பாறையில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய சூழலில் தற்போது வேலூரில் மேலும் ஒரு பெண் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் வேலூர் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details