தமிழ்நாடு

tamil nadu

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

By

Published : Jul 30, 2023, 10:53 PM IST

வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மகாதீபாராதனைகள் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

vellore-jalakandeswarar-temple-special-abhishekam-to-nandi-bhagavan-on-the-occasion-of-pradosha
பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

வேலூர்: கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து மலர் மாலைகள் அருகம்புல் வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி ஜலகண்டீஸ்வரர் சிறப்பு அலங்காரங்களை செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க சாமி உட்பிரகார உலாவும் வந்தது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திய பெருமானுக்கு செய்யபட்ட பிரதோஷ அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி மாத பிரதோஷத்தின் சிறப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்

சிவபெருமானுக்கு உரிய நாளாகப் பிரதோஷம் கூறப்படுகிறது. மாதந்தோறும் பிரதோஷ நாள் வரும். பௌர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாகவும், அமாவாசைக்கு மூன்று நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. இதுவே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வழிபாட்டிற்குச் சிறப்பு கூறிய மாதமாக விளங்கக் கூடிய ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மேலும் சிறப்பாகும். ஒவ்வொரு பிரதோஷமும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அப்படி ஆடி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த சுபநாளோடு சேர்ந்து பிரதோஷமும் வருகின்ற காரணத்தினால் இது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதோஷம் ராகு கால நேரத்தில் வருவதால் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படி இருக்க இந்த பிரதோஷத்திருநாளில் அம்மனே சிவபெருமானை வழிபாடு செய்து வரங்களைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.இந்த சிறப்பு மிகுந்த நாளில் சிவபெருமானின் வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகும் எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வீட்டிற்குக் கூடிய சிவபெருமானின் திருக்கோயில்களில் இந்த சிறப்பு மிகுந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

இந்தப் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திருநாளில் நந்தி தேவனை வணங்கி விட்டு அதன் பின்னர் சிவபெருமானின் வழிபாடு செய்வது பலன்களை இரட்டிப்பாக்கும்.

இதையும் படிங்க :Today Horoscope: மீன ராசிக் காரர்களுக்கு நெடுநாள் ஆசை நிறைவேறும் நாள்! உங்கள் ராசிக்கு எப்படி?

ABOUT THE AUTHOR

...view details