தமிழ்நாடு

tamil nadu

விளம்பரப் பலகை அமைக்கும் போது நேர்ந்த சோகம்... மின்சாரம் தாக்கி இருவர் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 7:31 AM IST

Electric shock: கடைக்கு விளம்பரப் பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பெங்களூரை சேர்ந்த இரண்டு தொழிலாளிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரப் பலகை அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி!
விளம்பரப் பலகை அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி!

வேலூர்: ஊசூர் அடுத்த குலத்துமேட்டில் ஆயில் பேட்டரி கடை நடத்தி வருகிறார் சரவணன். இவரது கடையின் மூன்றாவது மாடியில் விளம்பரப் பலகை வைப்பதற்காக பெங்களூரில் இருந்து நேற்று (அக். 22) மாலை மூன்று பேர் வந்து உள்ளனர். அதில் இருவர் கடையின் மேல் தளத்தில் விளம்பரப் பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அருகிலுள்ள மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டு இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் விளம்பர பலகை வைக்க வந்த மூன்று பேரில் சலீம், கௌஷிக் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் உடணடியாக அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பெரியார் குறித்து அவதூறு கருத்து.. பாஜக ஆதரவாளர் தூத்துக்குடியில் கைது!

பின்னர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விளம்பர பலகை வைக்கும் போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி விளம்பர பலகை வைத்துக் கொண்டிருந்த இருவர் மீது விழுந்து மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் குறித்து அரியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:இயக்குநர் ஹரியின் தந்தை உடல் சொந்த ஊரில் தகனம்!

ABOUT THE AUTHOR

...view details