தமிழ்நாடு

tamil nadu

புத்தாண்டு கொண்டாட்டம்... களைகட்டிய வேலூர் கோட்டையில் சுற்றுலாப் பயணிகள்

By

Published : Jan 1, 2023, 10:39 PM IST

இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலூர் கோட்டையில் புத்தாண்டை கொண்டாட பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் காலை முதலே வரத்தொடங்கி சந்தோஷமாக புத்தாண்டு பொழுதை கழித்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்... களைகட்டிய வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு கொண்டாட்டம்... களைகட்டிய வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு கொண்டாட்டம்... களைகட்டிய வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள்

வேலூரில்ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் மக்கள் கொண்டாடினர்.

மேலும் வேலூர் பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகே காவல்துறை சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கேக்குகளை வெட்டி, புத்தாண்டை வரவேற்றனர்.

அதேபோன்று வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பொதுமக்கள் 2023-ம் ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட வேலூர் கோட்டையில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குடும்பம் குடும்பமாக காலை முதலே வரத்தொடங்கி சந்தோஷமாக புத்தாண்டு பொழுதை கழித்தனர்.

அதேபோன்று வேலூர் கோட்டைக்கு உட்புறம் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வேலூரின் சுற்றுலாத் தலங்களான தங்ககோவில், அமர்த்தி உயிரியல் பூங்கா, திருப்பதி தேவஸ்தானம் கோயில், உள்ளிட்ட இடங்களிலிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க:புத்தாண்டு: பிச்சாவரத்தில் விடுமுறை நாட்களில் கூடுதல் படகுகளை இயக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details