தமிழ்நாடு

tamil nadu

குப்பை தொட்டியை கிணறாக மாற்றிய இளைஞர்கள்!

By

Published : Jul 16, 2019, 10:37 PM IST

வேலூர்: திருப்பத்தூர் அருகே 15 ஆண்டுகளாக குப்பை தொட்டியாக இருந்த கிணற்றை குடிநீர் கிணறாக இளைஞர்கள் மாற்றினர்.

thirupathur-youths-social-service

திருப்பத்தூர் அடுத்து காக்கனாம் பாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராம மக்கள் பலமுறை தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக போரட்டங்களும் சாலை மறியல்களிலும் ஈடுபட்டனர்.

குப்பை தொட்டியை கிணறாக மாற்றிய இளைஞர்கள்

அக்கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைத் தொட்டியாக இருந்த கிணற்றையும் குளத்தையும் தூர்வாரினர்.

மேலும் தங்கள் தூர்வாரிய கிணற்றில் தற்போது மழை பொய்ததால் 10 அடிக்கு மழை நீர் தேங்கியுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:திருப்பத்தூரில் கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்Conclusion:

ABOUT THE AUTHOR

...view details