தமிழ்நாடு

tamil nadu

CCTV: வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் நடத்திய கொலைவெறித் தாக்குதல்!

By

Published : Feb 7, 2023, 9:10 PM IST

வேலூர் மாநகராட்சி 26-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர், பார்க்கிங் பகுதியில் பணிபுரியும் நபரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வேலூர் பார்க்கிங் விவகாரம்:அதிர்ச்சி சிசிடிவி காட்சி
வேலூர் பார்க்கிங் விவகாரம்:அதிர்ச்சி சிசிடிவி காட்சி

CCTV: வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் நடத்திய கொலைவெறித் தாக்குதல்!

வேலூர்அருகே சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ராஜசேகர். இவர் அவரது சகோதரருக்கு சொந்தமான சத்துவாச்சாரி பகுதியில் உள்ள பார்க்கிங் யார்டில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு திமுக கவுன்சிலர் சேகர் என்பவருக்குச் சொந்தமான வீடு மற்றும் குடோன், ராஜசேகரின் சகோதரரின் பார்க்கிங் யார்டுக்கு அருகே உள்ளது.

இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரருக்குச் சொந்தமான இடத்தை திமுக மாமன்ற உறுப்பினர் சேகர் தொடர்ந்து அபகரிக்க முயல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேகர் மற்றும் அவரது மருமகன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பார்க்கிங் யார்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ராஜசேகர் மற்றும் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சியாகப் பதிவாகியுள்ளது. மேலும், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து திமுக மாமன்ற உறுப்பினர் சேகர், ராஜசேகர் மீது போட்டு கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் படுகாயம் அடைந்த ராஜசேகர் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனியாருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று, நிலத்தின் உரிமையாளருடைய சகோதரரை, திமுக மாமன்ற உறுப்பினர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இச்சம்வம் வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"தனி தமிழீழம் தான் தமிழ்நாட்டு மக்களின் இறுதி முடிவு" - திருமுருகன் காந்தி

ABOUT THE AUTHOR

...view details