தமிழ்நாடு

tamil nadu

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

By

Published : Dec 6, 2020, 8:43 PM IST

வேலூர்: பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Flood caution
Flood caution

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகொண்டா அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் பொன்னை மற்றும் பாலாறு நதிக்கரையோரம் உள்ள பொன்னை, கீரை சாத்து, வெப்பாளை, திருவலம், பாலேகுப்பம், தெங்கால், பரமசாத்து, கொல்லப்பள்ளி, மாதாண்டகுப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், மேலும் செல்பி பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்க தடை விதித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details