தமிழ்நாடு

tamil nadu

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்! என்ன காரணம்?

By

Published : Feb 23, 2023, 9:09 AM IST

வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்த வழக்கில் முருகன் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்த வழக்கில் முருகன் ஆஜர்!
பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்த வழக்கில் முருகன் ஆஜர்!

வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த முருகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் மீது வேறு ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

வேலூர் மத்திய சிறையில் இருந்த போது, முருகனின் சிறை அறையில் கடந்த 2020ஆம் ஆண்டு பெண் சிறை அதிகாரி ஒருவர் சோதனை செய்ய வந்துள்ளார். அப்போது பெண் சிறை அதிகாரியை முருகன் தகாத வார்த்தையில் பேசியதாகவும், தனது உடலில் உடை இல்லாமல் நிர்வாணமாக நின்று பெண் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இது தொடர்பாக அப்போது சிறைத்துறை அளித்த புகாரின் பேரில், பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (பிப்.22) வழக்கு விசாரணை தொடர்பாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் வேலூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் திருமால் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

சுமார் அரை மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரம் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாலும், முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:வேலூர் நீதிமன்றத்தில் முருகனை சந்தித்த நளினி!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details