தமிழ்நாடு

tamil nadu

வேலூர் அரசு மருத்துவமனையில் போக்சோ விசாரணை கைதி தப்பியோட்டம்!

By

Published : Apr 22, 2023, 6:38 PM IST

வேலூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி, தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

போக்சோ விசாரணை கைதி தப்பி ஓட்டம் - வெளியான சிசிடிவி
போக்சோ விசாரணை கைதி தப்பி ஓட்டம் - வெளியான சிசிடிவி

போக்சோ விசாரணை கைதி தப்பி ஓட்டம் - வெளியான சிசிடிவி

வேலூர்:திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுமிக்க நபர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அருகில் இருந்த கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள அவரை, திடீரென மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், சிறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக் காவலர்கள் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி, இன்று (ஏப்ரல் 22) வார்டில் இருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து, தப்பியோடிய விசாரணைக் கைதியை காவலர்கள், மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கைதி, மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் முதலாவதாக ஆட்டோவில் ஏறுவது போல் சென்று, பின்னர் ஆரணி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் ஏறிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளை வைத்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக சிறைத் துறை சார்பில் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:24 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: திருவண்ணாமலையில் ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details