தமிழ்நாடு

tamil nadu

நாய்க்குட்டியை காப்பாற்ற முயன்ற எஜமானர் பலி.. வேலூரில் நிகழ்ந்த சோகம்!

By

Published : Dec 15, 2022, 9:50 AM IST

Updated : Dec 15, 2022, 10:29 AM IST

வேலூர் அருகே தான் வளர்ந்து வந்த நாய்க்குட்டி கிணற்றில் விழுந்த நிலையில் அதனை காப்பாற்ற கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாயை காப்பாற்ற சென்றவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!
நாயை காப்பாற்ற சென்றவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!

வேலூர்:காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை ஜி.என்.நகர் மணவாளமோடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமரேசன் என்கிற வல்லரசு(42). இவருக்கு ரேவதி என்ற மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் தனது வீடு அருகே உள்ள கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்துள்ளது.

இதைப் பார்த்த குமரேசன் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி நாய்க்குட்டியை மீட்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக குமரேசன் கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாத குமரேசன் நாய்க்குட்டியை கிணற்றுக்கு மேலே வீசிவிட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றி விட்டு குமரேசன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஓடும் லாரியில் முன் சக்கரம் முறிந்து விபத்து; வாணியம்பாடியில் மூவர் படுகாயம்!

Last Updated : Dec 15, 2022, 10:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details