தமிழ்நாடு

tamil nadu

கரூர் மேம்பால கட்டுமான பணியில் ஊழலா? அமைச்சர் வேலு விளக்கம்

By

Published : Nov 24, 2022, 6:59 PM IST

கரூர் மேம்பால கட்டுமான பணி முறைகேடு தொடர்பாக இரு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலூர் அப்துல்லாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்ச்சி மையத்தில் புதியதாக 7 பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 69 ITI ம் செயல்பட தொடங்கும் என கூறினார். முதலமைச்சரின் உத்தரவு படி ஒன்றிய மற்றும் கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலை தரத்துக்கு தரம் உயர்த்த 2200 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெற்றுள்ளது" என்றார்.

கரூர் மேம்பாலத்தில் ஊழல் என எதிர்க் கட்சி தலைவர் புகார் கூறியது குறித்த கேள்விக்கு, "ஒன்றறை ஆண்டு நல்லாட்சியை பொறுக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் பழைய புராணத்தை பேசி வருகிறார். கரூர் பாலத்தில் 90, 95 % பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணிகள் முடிந்ததாக கணக்கு இருந்ததை அடுத்து விசாரித்து 2 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து, ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். வேலைகள் தரமாக செய்யப்பட்டு முழுமை அடைந்துள்ளது" என்றார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விரிஞ்சிபுரம் பாலாற்று தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக கட்ட திட்ட மதிப்பீடு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பீடு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. வரும் ஜனவரியில் பணிகள் தொடங்கும்.

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் உள்ளது குறித்த கேள்விக்கு, போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் உள்ளது. கேத்தாண்டிபட்டி சர்க்கரை ஆலைக்கே கள்ளக்குறிச்சியில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு இயக்கி வருகிறோம். இது தொடர்பாக வேளாண்மை துறை அமைச்சரிடம் பேசி வருகிறேன். உரிய தீர்வு காணப்படும்.

மாநில நெடுஞ்சாலைகள் தரம் இல்லை என நிதின் கட்காரி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர் பொத்தம் பொதுவாக சொல்லியுள்ளார். தமிழகத்தை குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒருமுறை அவர் பாராளுமன்றத்தில் பேசும்போது தமிழகத்தில் சாலைகள் தரமாக உள்ளதாகவும், விபத்துக்கள் குறைவாக உள்ளதாகவும் கூறினார்.

தேவையற்ற, விதிமீறிய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. அதே சமயம் சுங்கச்சாவடி கட்டணத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் நீடித்துவரும் நிலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு,
வேலூர் சுற்றுசாலை (புறவழிச்சலை) அமைக்க நிலம் இன்னும் எடுக்கவில்லை. விரைவில் பணிகள் தொடங்கும். நில எடுப்பை தாமதப்படுத்துவதால் அரசுக்கு பணிச்சுமை மற்றும் நிதிச்சுமை ஏற்படுகிறது.

ஆகவே DRO இதனை கருத்தில் கொண்டு முன்னுரிமை அளித்து நில எடுப்பு பணியை விரைந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த பொதுப்பணித்துறை சார்பில் 69 கல்லூரிகள் கட்டப்பட்டு வருகிறது. இவை வரும் கல்வி ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் " என அமைச்சர் வேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க : தென் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details