தமிழ்நாடு

tamil nadu

6 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: முக்கியக் குற்றவாளி கைது

By

Published : Jun 24, 2021, 12:07 PM IST

வேலூரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார்.

vellore news  vellore latest news  crime news  latest news  vellore murder case  man arrested in vellore who connected with murder  man arrested in vellore  vellore murder case man arrested  murder  வேலூர் செய்திகள்  குற்றச் செய்திகள்  கொலை வழக்கு  வேலூர் கொலை வழக்கு  கைது  வேலூர் கொலை வழக்கு ஒருவர் கைது  செம்மரக் கடத்தல்  நாகப்பட்டிணம் நீதிமன்றம்  சிறை  காவல் துறை  குற்றவாளி  காவல் கண்காணிப்பாள  மரணம்  விசாரணை  வேப்பங்குப்பம்
2015ல் நடந்த கொலை...ஒருவர் கைது...

வேலூர்: 2015ஆம் ஆண்டு வேப்பங்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் (26), அவரது கூட்டாளிகள் ஏழு பேர், செம்மரக் கடத்தல் தொடர்பாக குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின் கை கலப்பாக மாறியது.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது சரவணன் கொலைசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

ஒருவர் கைது

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர், கடந்த ஆண்டு நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின்கீழ் பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறியது.

இதனை விசாரிப்பதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மேற்பார்வையின்கீழ், வேலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்திருந்த நிலையில், இரண்டு பேர் முன்பிணை பெற்றனர்.

இதில் முக்கியக் குற்றவாளியான அணைக்கட்டைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தலைமறைவாக இருந்துவந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 22) தனிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:அமைச்சரவைப் பட்டியலில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏவின் பெயர்!

ABOUT THE AUTHOR

...view details