தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் வெளுத்துவாங்கும் மழை! கொத்துக் கொத்தாக செத்துமடிந்த கோழிகள்

By

Published : Aug 19, 2019, 8:34 AM IST

Updated : Aug 19, 2019, 9:54 AM IST

வேலூர்: கனமழை காரணமாக ஆம்பூர் அருகே காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால் 750-க்கும் மேற்பட்ட கோழிகள்  பரிதாபமாக உயிரிழந்தன.

கன மழை காரணமாக 750க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் வசித்துவருபவர் யுவராஜ். அதேப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் கோழிப்பண்ணை நடத்தி கோழிகளை கடைகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆம்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 750-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு

இந்நிலையில், கோழிப்பண்ணைக்கு அருகில் சிறு காட்டாறு செல்கிறது. அக்காட்டாறில், நேற்று மதியம் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால், பண்ணையின் ஒரு பகுதியிலிருந்த சுமார் 750-க்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.

Intro: ஆம்பூர் அருகே காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு மழை நீர் கோழிப்பண்ணைக்குள் புகுந்த்தால் 750 க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு.


Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ், இவர் அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி கோழிகளை கடைக்களுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார், இந்நிலையில் கடந்த இருநாட்களாக ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கிராமங்களில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் யுவராஜின் கோழிப்பண்ணைக்கு அருகில் சிறு காட்டாறு செல்லவதால், அக்காட்டாறில், இன்று மதியம் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிப்பண்ணைக்கு மேல் உள்ள நிலத்தின் கரையை உடைத்து காட்டாறு வெள்ளம் கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால், பண்ணையின் ஒரு பகுதியில் இருந்த சுமார் 750 க்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி இறந்ததுள்ளது.


Conclusion: மேலும் 750 க்கும் மேற்பட்ட கோழிகள் ஒருசேர இறந்ததால், யுவராஜயின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், மேலும் இறந்த கோழிகள் CP எனும் இறைச்சி எனும் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
Last Updated : Aug 19, 2019, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details