தமிழ்நாடு

tamil nadu

கவரிங் நகைகளை வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி!

By

Published : Dec 15, 2022, 1:47 PM IST

Updated : Dec 15, 2022, 2:20 PM IST

வாலாஜாபேட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் 45 சவரன் போலி நகைகளை வைத்து 14 லட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்க முலாம் பூசிய நகைகள்; தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி
தங்க முலாம் பூசிய நகைகள்; தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் மோசடி

வேலூர்: வாலாஜாபேட்டை பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த பிரகாஷ், அஜித் ஆகிய இரண்டு நபர்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரையில் தனித்தனி நாட்களில் சிறுக சிறுக 45 சவரன் நகையினை வைத்து 14 லட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்று உள்ளனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற வருடாந்திர தணிக்கை ஆய்வின்போது பிரகாஷ், அஜித் ஆகிய இரண்டு நபர்கள் வழங்கி இருந்த 45 சவரன் தங்க நகையானது தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க நகை என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் இந்த மோசடி குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை காவல்துறையினர் போலியான தங்க முலாம் பூசப்பட்ட நகையை வைத்து 14 லட்சம் மோசடி செய்த பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இரண்டு நபர்களை தேடினர்.

வாலாஜாபேட்டை காவல் துறையினர் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இரண்டு நபர்களையும் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே வைத்து மடக்கி பிடித்து, பின்னர் காவல் நிலையம் கொண்டு சென்று இருவரின் மீதும் 420 மற்றும் 418 ஆகிய இரு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்துள்ளனர்.

தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு நபர்கள் தங்கம் முலாம் பூசிய 45 சவரன் போலி தங்க நகையை வைத்து 14 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 6 மீனவர்கள் கைது!

Last Updated : Dec 15, 2022, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details