தமிழ்நாடு

tamil nadu

பொன்னை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் - தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

By

Published : Sep 20, 2019, 3:12 PM IST

வேலூர்: பொன்னை ஆற்றில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் வந்ததால் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பொன்னை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம்

வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்துவருகிறது. அந்த வகையில் வேலூர் பொன்னை சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் பொன்னை ஆற்றில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொன்னை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம்

இதற்கிடையில் பொன்னை ஆற்றில் தடுப்பணை இல்லாததால் அந்த தண்ணீர் பாலாற்றில் சென்று கலந்து வீணாக கடலுக்குச் செல்கிறது. எனவே மழைநீரை தேக்கிவைக்கும் வகையில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகள் கட்டி மழைநீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வெள்ளநீரை தேக்கிவைக்க தடுப்பணை ஏற்படுத்துவதன் மூலம் மணல் கொள்ளை தடுக்கப்படுவதுடன், ஆற்றுப்படுகையையொட்டியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: "வெயில் நகரா இது?" - வேலூரில் வெளுத்து வாங்கிய மழை!

Intro:வேலூர் மாவட்டம்

பொன்னை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் - தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
Body:வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வேலூர் பொன்னை சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பொன்னை ஆற்றில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில் பொன்னை ஆற்றில் தடுப்பணை இல்லாத்தால் அந்த தண்ணீர் பாலாற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே
மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகள் கட்டி மழைநீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வெள்ள நீரை தேக்கி வைக்க தடுப்பணை ஏற்படுத்துவதன் மூலம் மணல் கொள்ளை தடுக்கப்படுவதுடன், ஆற்றுப்படுகையையொட்டியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறும் என விவசாயிகள் கூறுகின்றனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details