தமிழ்நாடு

tamil nadu

'வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுவதுபோல் இல்லை'

By

Published : Aug 2, 2021, 7:58 AM IST

பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ள திமுகவின் நடவடிக்கை அதனை நிறைவேற்றுவதுபோல் இல்லை என்று தமிழ்நாடு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

வேலூர்: தமிழ்நாடு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் நேற்று (ஆக. 1) வேலூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இளநிலை எம்.பி.பி.எஸ்.இல் 1,500 இடங்களும், முதுநிலை எம்.பி.பி.எஸ்.இல் 2000 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

பாஜக பிற்படுத்தப்பட்டோருக்கு முக்கியத்துவம், சமூகநீதியைக் காக்கும் கட்சியாக உள்ளது. அகழ்வாராய்ச்சி அவசியம், அவசியம் இல்லை என்பது அவரவர் கருத்து. இது நம் கலாசாரத்தை வெளிப்படுத்துவது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் காரணமாக, அகழ்வாராய்ச்சி ஆவணங்களே முக்கியப் பங்குவகிக்கிறது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை பாஜக எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும். தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

திமுகவின் நடவடிக்கை

திமுக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், திமுகவின் நடவடிக்கை நிறைவேற்றுவதுபோல் இல்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள். எழுவர் விடுதலையில் சட்ட சிக்கல் உள்ளது.

பாஜக, நீட் வேண்டும் என்றபோது, திமுக விமர்ச்சித்து பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், இப்போது நீட் எழுதச் சொல்கிறது. நீட் விவகாரத்தில் திமுக தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். பாஜக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்கப்பட்டது. அதேதான் எங்களது நிலைப்பாடும். தற்போது கால அவகாசம் முடிந்துவிட்டது. வரும் காலங்களில் ஆக்சிஜன் தேவைபட்டால் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதது வருத்தமே, அடுத்தடுத்து பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:NEETஇல் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details