தமிழ்நாடு

tamil nadu

வக்பு வாரிய நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அமைச்சர் நிலோபர் கபீல் மீது புகார்

By

Published : Apr 9, 2021, 2:14 PM IST

Updated : Apr 9, 2021, 7:54 PM IST

வேலூர்: கொணவட்டத்தில் உள்ள வக்பு வாரிய நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்ததாக அமைச்சர் நிலோபர் கபீல் மீது மசூதி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

Complaint against Minister Nilofar Kafil that tried to occupy the Waqf Board land
Complaint against Minister Nilofar Kafil that tried to occupy the Waqf Board land

வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் ரோசா (Roza) மசூதிக்குச் சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக வாணியம்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான நிலோபர் கபீல் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் மசூதி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (ஏப். 07) மாலை 5.30 மணி அளவில் அமைச்சர் நிலோபர் கபீலுடன் வந்த சிலர் நிலத்தை அளந்ததை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மசூதி நிர்வாகிகள், அதனைத் தட்டிக் கேட்டபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் நிலோபர் கபீலிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது, "கொணவட்டம் பகுதியில் உள்ள வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை நான் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரில் உண்மை இல்லை.

வக்பு வாரிய இடத்தை நிர்வகித்துவந்தவர்கள் அதைக் குறைவான தொகைக்கு உள் குத்தகைக்கு விட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டு தற்போது வக்பு வாரியத்தின் நேரடி பராமரிப்பில் அது உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வக்பு வாரிய நிர்வாகிகளால் அலுவலகம் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை நான் நேரில் பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை வந்ததை அடுத்து நேரில் பார்க்கச் சென்றேன். மற்றபடி அந்த நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்வதாகப் பொய்க் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மேலும் எங்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்" எனக் கூறினார்.

Last Updated :Apr 9, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details