தமிழ்நாடு

tamil nadu

வீட்டு கதவை உடைத்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

By

Published : Aug 21, 2021, 3:24 PM IST

தனியார் மருத்துவமனை மேலாளரின் வீட்டு கதவை உடைத்து ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 36 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள்  கொள்ளையடித்து சென்றனர்.

Robbery
Robbery

வேலூர்: அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விஜயராகவன் ஆகஸ்ட் 19ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து , விஜயராகவன் நேற்று (ஆக 20) இரவு தனது வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 36 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் விஜயராகவன் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details