தமிழ்நாடு

tamil nadu

திருமணமான இளம்பெண் தற்கொலை!

By

Published : Feb 27, 2021, 12:29 PM IST

Updated : Feb 27, 2021, 1:14 PM IST

திருச்சி: மணப்பாறையில் திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொ திருமணமான இளம்பெண் தற்கொலை!லை
திருமணமான இளம்பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மறவனூர் இடையபட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி(20). இவருக்கும் பொய்கைபட்டியை சேர்ந்த ஜெயராமன்(32) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணப்பாறை அருகே தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு கஸ்தூரி படித்து வந்த நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கஸ்தூரி கடந்த 6 மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் கஸ்தூரி நேற்று (பிப்.26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பழவேற்காட்டில் புது மணப்பெண் தற்கொலை

Last Updated : Feb 27, 2021, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details