தமிழ்நாடு

tamil nadu

சாக்லேட் பவுடரில் 211 கிராம் தங்கம் கடத்தல்!

By

Published : Jan 9, 2023, 9:12 AM IST

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவர், சால்லேட் பவுடரில் 211 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் சாக்லேட் பவுடரில் கலந்து 211 கிராம் தங்கம் கடத்தல்!
திருச்சியில் சாக்லேட் பவுடரில் கலந்து 211 கிராம் தங்கம் கடத்தல்!

திருச்சி: துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா IX612 என்ற விமானம், சனிக்கிழமை (ஜன.7) திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கு சுங்கத்துறை அலுவலர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாக்லேட் பவுடருடன் கலந்த 211 கிராம் தங்கத்தை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் ஆவணங்கள் இல்லாத 386 கிராம் எடையுள்ள 3 தங்கச் செயின்களும் கண்டறியப்பட்டன. இதன் மதிப்பு ரூ.21,55,038 ஆகும். பின்னர் இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அந்நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Thanjavur: காரில் கஞ்சா கடத்திய தீயணைப்பு வீரர் கைது!

ABOUT THE AUTHOR

...view details