தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் 20 ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் ஏன்? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

By

Published : Jul 31, 2023, 10:14 PM IST

20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் 2 முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணத்தை தற்போது ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருச்சி:தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி ரயில் நிலையத்திற்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் புதிய வழித்தடம் எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8ல் கடந்த 20 ஆம்தேதி முதல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை இன்டர்லாக்கிங் பணி நடைபெறும் எனவும்; இந்த பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படாமல் முழுவதும் ஊழியர்களின் சிக்னல்களைக் கொண்டே ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில்களை ரத்து செய்தல், வழித்தடங்களை மாற்றி அமைத்தல், ரயில் தாமதம் ஏற்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்தப் பணியானது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணி செய்து வருவதால் வைகை, குருவாயூர், பொதிகை, நெல்லை, பாண்டியன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை இணைக்கும் ரயில்களும் தாமதமாகச் செல்கின்றன. இப்பணியானது நாளை முடிவடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் இதுதவிர, கல்லுக்குழி காலனி பகுதியில், 4.1 கோடி ரூபாய் செலவில், 2வது நுழைவாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.ரயில் சிக்னல்கள் தானியங்கிக்கு பதிலாக மேனுவலாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, திருச்சிக்கு வரும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

பாண்டியன், நெல்லை, பொதிகை, திருவனந்தபுரம் இன்டர்சிட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் 2 முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு நள்ளிரவு 1 மணிக்கு வர வேண்டிய ரயில், 5 மணி நேரம் தாமதமாக காலை 6 மணிக்கு திருச்சிக்கு வந்தடைந்தது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். 'இன்டர் லாக்கிங்' பணிகள் நாளை மாலைக்குள் முடிவடைந்து விடும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இன்று மாலைக்குள் ரயில் சேவை சீரடைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

இன்டர்லாக்கிங் வேலை என்பது பாயிண்ட்ஸ், சிக்னல், டிராக் சர்க்யூட்கள் மற்றும் பிற சிக்னல் சாதனங்களை தற்காலிகமாக துண்டிப்பதாகும். இந்த வேலை பொதுவாக லிவர் பிரேம்களை அதிகமாக இழுப்பது, யார்ட் மறுவடிவமைப்பு போன்ற வேலைகளில் ஈடுபடுவதாகும்.

தளவடிவமைப்புகளில் மாற்றங்கள், ரயில்களின் சீரானஇயக்கத்திற்காக கூர்மையான வளைவுகளை சீரமைக்கும் பணி, ஓவர் ஹெட் உபகரணங்கள் - உயர் அழுத்த கேபிள்கள் மறுசீரமைத்தல் மற்றும் சிக்னல் கேபின்களை சரிசெய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தரிசாகும் தஞ்சை... கருகும் நெல் பயிரை காக்க... குடத்தில் தண்ணீர் கொண்டு நீர் பாய்ச்சும் அவலம்!

ABOUT THE AUTHOR

...view details