தமிழ்நாடு

tamil nadu

CCTV: கத்தியைக் காட்டி மிரட்டி மதுபானங்கள் வாங்கிச்சென்ற இளந்தாரிகள்

By

Published : Dec 22, 2022, 6:47 PM IST

திருச்சி டாஸ்மாக் ஒன்றில் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபானம் வாங்கிச் சென்ற இருவரின் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்கள் வாங்கிச் சென்ற வாலிபர்கள்- வைரலான சிசிடிவி காட்சி
கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்கள் வாங்கிச் சென்ற வாலிபர்கள்- வைரலான சிசிடிவி காட்சி

CCTV: கத்தியைக் காட்டி மிரட்டி மதுபானங்கள் வாங்கிச்சென்ற இளந்தாரிகள்

திருச்சி:மாநநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 177 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி திருவானைக்காவலில் செயல்பட்டு வரும் ஒரு மதுபானக் கடையில் இரு இளைஞர்கள் மது வாங்குகின்றனர்.

அப்போது விற்பனையாளர் மது பாட்டிலை கொடுத்து பணம் கேட்கும்பொழுது அவரிடம் வம்பு செய்யும் அந்த இளைஞர்களில் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கொடுக்க முடியாது எனக் கூறி, ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு மதுபாட்டில்களை வாங்கிச்செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 17, 18 வயதிற்கு உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்ற மிரட்டல் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் தொடர்கதையாகி வருவதாகவும், எனவே தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:அதிக மதிப்பெண் வழங்குவதாக மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details