தமிழ்நாடு

tamil nadu

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

By

Published : Dec 8, 2020, 9:56 AM IST

திருச்சி: மணப்பாறை அருகே பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, ஐந்து பிள்ளைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

collapsed
collapsed

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியில் நேற்று (டிச. 07) நள்ளிரவு அரசு உதவிபெறும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து அருகிலுள்ள செல்வக்குமார் (45) என்பவரின் ஓட்டு வீட்டின் மீது பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது.

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வக்குமாரின் தாய் நல்லம்மாள், குடும்பத்தினர் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது மனைவி ராசாத்தி, ஐந்து பிள்ளைகள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details