தமிழ்நாடு

tamil nadu

திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல்.. அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 9:17 PM IST

Trichy DMK: அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான குடமுருட்டி சேகரை திருச்சி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளருக்கு பதவி வழங்கியதால் குடமுருட்டி சேகர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஓட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Poster against DMK minister Anbil Mahesh Poyyamozhi
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக திமுக கட்சி நிர்வாகி போஸ்டரா?

திருச்சி:திருச்சி மாவட்ட திமுகவில் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் நேருவின் ஆதரவாளரான வைரமணியும், வடக்கு மாவட்ட செயலாளராக முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இருந்து வருகின்றனர்.

திமுக தெற்கு மாவட்ட செயலாளரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது அவரது மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான குடமுருட்டி சேகரின் பதவியிலிருந்து நீக்கி தன்னுடைய ஆதரவாளருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி வழங்கியதாக கூறப்படுகிறது. இது போன்று அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களை பதவியிலிருந்து நீக்கி தனது ஆதரவாளர்களை நியமனம் செய்யும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த செயலுக்கு திருச்சி திமுக கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு!

இந்த நிலையில், தான் 'உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு, கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலனில்லை' என்ற அறிஞர் அண்ணாவின் வாசகத்துடன் குடமுருட்டி சேகர் திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மறைமுகமாக கண்டித்து போஸ்டர் வைத்து திமுகவில் போர்க்கொடியை உயர்த்தி உள்ளதாகவும்.

இந்த பேனர் விவகாரம் தற்போது திமுக தலைமை வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், மாற்றம் பிறக்கும் என நம்பிக்கையுடன் திருச்சி மாவட்டத் திமுக தொண்டர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டும் இன்றி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர், திமுக இளைஞரணி மாநில செயலாளர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் என மூன்று பதவிகளை வகித்து வருவதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியையும் பறிக்க வேண்டும் எனவும் தலைமைக்கு திருச்சி மாவட்ட திமுகவிலிருந்து மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"காய்ச்சல், தொண்டை வலியால் அதிகம் பேச முடியவில்லை" - திமுக தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details