தமிழ்நாடு

tamil nadu

’மகாராஷ்டிராவில் மறு தேர்தல் நடத்த வேண்டும்’ - திருநாவுக்கரசு

By

Published : Nov 12, 2019, 11:40 PM IST

திருச்சி: மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

mp thirunavukkarasu

திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவர், ”மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மறு தேர்தலை நடத்த வேண்டும். மாறாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அது மக்கள் விரும்பிய ஆட்சியாக இருக்காது” என்றார்.

அதேபோல் சிவாஜியின் நிலைதான் ரஜினி, கமலுக்கு ஏற்படும் என்று முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துதான் முதலமைச்சரானர். மக்கள் ஓட்டுப்போட்டு அவர் முதலமைச்சர் ஆகவில்லை.

மகாராஷ்டிராவில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - எம்பி திருநாவுக்கரசு

மேலும், சிவாஜி கணேசன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கூட்டணி அமைத்ததால்தான் தோல்வியடைந்தார். ஒருவேளை அவர் சரியான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 'பலமுறைப் பயன்படுத்தும் செயற்கைக்கோள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது' - மயில்சாமி அண்ணாதுரை

Intro:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாஜக அதிகாரத்தை விட்டு கொடுக்காததால் பாஜகவும் சிவசேனாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்காத சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது

மகாராஷ்டிராவில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்தார்

பணப்பட்டுவாடா,குதிரை பேரம் ஆகியவை செய்து ஆட்சி அமைக்க முற்படுவார்கள் ஆகையால் அதற்கெல்லாம் வழிவகை செய்யாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாத இந்த சூழ்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தினால்
முறையான ஆட்சி அமையவோ மக்கள் விரும்பிய ஆட்சி ஏற்படவோ
ஒரு நேர்மையான அரசு ஏற்பட வழி வகுக்காது இதனால் மீண்டும் தேர்தல் நடத்துவது தான் சரியானது என தெரிவித்தார்

அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி கூறிய கருத்துக்கு முதல்வர் எதிர் கருத்து கூறியிருந்தார் சாதாரண நடிகர்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியதை பற்றி கேட்டதற்கு

எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாதாரணமான சட்டமன்ற உறுப்பினர் எனவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அவளுக்குத்தான் மக்கள் வாக்களித்தனர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்கு அளிக்கவில்லை என தெரிவித்தார்

ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு அதிமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து தான் முதலமைச்சர் ஆனார் மக்கள் வாக்களித்து அவர் முதல்வராக வில்லை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் முடிவு எடுப்பார்கள்

நடிகர் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்து தோல்வியடைந்தார் அதே நிலையில்தான் ரஜினிகாந்த் அவர்களும் கமல்ஹாசன் அவர்களும் தள்ளப்படுவார்கள் என முதல்வர் கூறிய கருத்திற்கு

ஒருவரை ஒருவரோடு ஒப்பிடமுடியாது சிவாஜி கணேசன் அவர்கள் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கூட்டணி அமைத்ததால் தோல்வியடைந்தார் சரியான கூட்டணி அமைத்திருந்தால் வென்றிருப்பார் என தெரிவித்தார்

தோற்றவர்களை மட்டும் முன்னுதாரணம் காட்ட வேண்டாம் எம்ஜிஆர்,என்டிஆர் போன்றவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் எனக் கூறினார்

வெற்றி தோல்வி என்பது மக்கள் முடிவு செய்யவேண்டிய ஒன்று
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் மக்களுடைய விருப்பம் என தெரிவித்தார்

சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று முதல்வர் கூறிய கருத்திற்கு

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அவர்களை அரசியலுக்கு வர வேண்டாம் என்று யாரும் கூற முடியாது அவர்களை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் மக்களுடைய விருப்பம் சினிமாவில் நடித்து உழைத்த பணத்தை வைத்துக்கொண்டுதான் வருகிறார்கள். திருடியோ கொள்ளையடித்தோ மக்களை ஏமாற்றி சம்பாதித்து வரவில்லை என தெரிவித்தார்Conclusion:

ABOUT THE AUTHOR

...view details