தமிழ்நாடு

tamil nadu

'புதியதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு' - அமைச்சர் கே.என்.நேரு

By

Published : Jan 4, 2022, 2:28 PM IST

அரசின் திட்டங்களால் புதியதாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த நேற்று (ஜன. 3) ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தந்த பகுதியில் பள்ளி அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை வழங்கி மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இத்திட்டத்தை நேற்று (ஜன.3) புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூட 50 விழுக்காடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிந்து நோய்த் தொற்றை தடுக்க வேண்டும்.

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஒமைக்ரானுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படாமல் இருந்தாலும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். திருச்சி இரண்டாம் தலைநகரமாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. மணப்பாறை சிப்காட்டில் ஆயுத தளவாடங்கள் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

புறநகர் பகுதிகளில் அரை வட்ட சாலை பணிகள் முழுவதும் நிறைவுபெறும் நிலையில் புதிய வியாபாரங்கள் நடைபெறும். அடிப்படை வசதிகள் முழுவதும் திருச்சிக்கு கொண்டு வந்து சேர்க்கும். புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட முதலமைச்சரிடம் அனுமதிபெற்று, 45 நாள்களுக்குள் டெண்டர் விடப்படும். பின்னர் ஒரு வருடத்திற்குள் புதிய பேருந்து நிலையம் பணி நிறைவுபெறும்.

இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விவசாய நிலங்கள், வியாபார தலங்களாக மாறும்போது விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். எந்தத் திட்டம் ஆரம்பித்தாலும் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள பலர் குறை சொல்லித்தான் ஆவார்கள்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி தயாராக உள்ளது. மாஸ்க் தான் பெரிய மருந்து, மூன்று நாள்களுக்குள் பாஸிடிவ் என்பது நெகட்டிவாக மாறியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க:விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details