தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் மகப்பேறு மரணங்கள் அதிகரிப்பு:  ஆட்சியர் வேதனை!

By

Published : Nov 7, 2020, 11:02 AM IST

திருச்சியில் கடந்த ஆண்டைவிட மகப்பேறு மரணங்கள் அதிகரித்திருப்பது வேதனையளிக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறினார்.

ஆட்சியர் சிவராசு
ஆட்சியர் சிவராசு

திருச்சி மாவட்ட சுகாதார துறை மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் சிவராசு கூறியதாவது, “திருச்சி மாவட்டத்தில் கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை 10 மகப்பேறு மரணங்கள் நடந்தது. 2020 - 21 ஆம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை 18 மகப்பேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மகப்பேறு மரணம் கடந்த ஆண்டு ஆண்டு 49-லிருந்து, நடப்பாண்டில் 88 ஆக அதிகரித்துள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளை முறையே பதிவு செய்து 'சீமாங்' நெறிமுறைகளின்படி சிகிச்சை அளிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும்போது தாமதமின்றி உரிய நேரத்தில் பரிந்துரை செய்ய வேண்டும்.

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்கும் போது பெண்களின் வயது மற்றும் அவர்களின் தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டு மிகவும் சிக்கல் உள்ள பெண்களுக்கு ஆலோசகர்களை கொண்டு குழந்தை தத்தெடுப்பு பற்றிய ஆலோசனை வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மகப்பேறு மரணங்கள் ஏற்படாத வண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க:மநீம-வைக் கண்டு பயப்படும் அதிமுக- டாக்டர் மகேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details