தமிழ்நாடு

tamil nadu

'இல்லம் தேடி கல்வி' சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கிய நபர் - சர்மிளா சங்கர் குழு நீக்கம்

By

Published : Dec 22, 2021, 12:08 AM IST

இல்லம் தேடி கல்வி கலைப் பிரச்சாரக் குழுவின் சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கிய நபரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி சர்ச்சையான நிலையில், சர்மிளா சங்கர் தலைமையிலான குழுவை நீக்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'இல்லம் தேடி கல்வி' சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கும் நபர்
'இல்லம் தேடி கல்வி' சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கும் நபர்

திருச்சி: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தன்னார்வலர்கள், பள்ளி நேரம் முடிந்த பின் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் சென்று கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பாடம் நடத்துவார்கள். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார்.

இந்த திட்டம் குறித்துப் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கலைப் பிரச்சார பயணம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சி தொட்டியம் அருகே ஒரு கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, அந்த குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர், இல்லம் தேடி கல்வி கலைப் பிரச்சார குழுவின் சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கியுள்ளார்.

'இல்லம் தேடி கல்வி' சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கும் நபர்

இதை அங்கிருந்தவர்கள் காணொலியாகப் பதிவு செய்தது இணையத்தில் பதிவேற்றினர். இந்த காணொலி நேற்று (டிச.20) சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டது. அதில் அந்த நபர் சர்மிளா சங்கர் கலைப் பயணக்குழுவை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.

திருச்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 8 கலை பிரச்சாரக் குழு ஈடுபட்டு வந்தது. இந்த பிரச்சாரக்குழுவில் ஒன்றான சர்மிளா சங்கர் தலைமையிலான குழு, கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் அந்த குழு விழிப்புணர்வு பிரச்சாரத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:School education: இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் கட்டாயப் பணியிட மாறுதல்

ABOUT THE AUTHOR

...view details