தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் வீடுதோறும் கரோனா பரிசோதனைகள் தொடக்கம்!

By

Published : May 17, 2021, 4:47 PM IST

திருச்சி: திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (மே.17) முதல் வீடுதோறும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

திருச்சியில் வீடுதோறும் கரோனா பரிசோதனைகள் தொடக்கம்!
திருச்சியில் வீடுதோறும் கரோனா பரிசோதனைகள் தொடக்கம்!

திருச்சியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிக பாதிப்பு, மிதமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில் அனைத்து வீடுகளிலும் உள்ள நபர்களுக்கு ஆக்ஸிஜன் அளவினை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 795 பணியாளர்கள், 50 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர். இன்று (மே.17) முதல் தினமும் நூறு வீடுகள் வீதம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒவ்வொரு வீடாகப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அப்போது எவருக்கேனும் ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காட்டிற்கும் கீழாகவோ அல்லது வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ இருந்தால் பாரசிட்டமால், வைட்டமின்-சி, ஜிங்க், கபசுர குடிநீர் தயாரிக்கும் பாக்கெட், முகக்கவசம் ஆகியவை அடங்கிய மருத்துவத் தொகுப்பு பெட்டகம் ஒன்று வழங்கப்பட உள்ளது.

மேலும் வீடுதோறும் கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அதனால் பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்புத் தர மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

ABOUT THE AUTHOR

...view details