தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டம்

By

Published : Jan 6, 2020, 9:29 AM IST

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 ஆவது நாளாக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விவசாயிகள்
விவசாயிகள்

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால், விவசாயிகள் கடன் தள்ளுபடி, நகை ஏலம் ஜப்தியை நிறுத்த வேண்டும், வெங்காயத்தை அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்தல், 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டும், தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பது, ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி அணைக்கு திருப்பி விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

போராட்டத்தின் முதல் நாளில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று 4வது நாளாக மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக விவசாயிகள் நிர்வாணமாக சென்னையை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வேலூரில் பொங்கல் பரிசு வரும் 9ஆம் தேதி வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details