தமிழ்நாடு

tamil nadu

கிராவல் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது!

By

Published : May 6, 2021, 6:33 AM IST

திருச்சி : மணப்பாறை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய வாகனங்கள் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டனர்.

கிராவல் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது!
கிராவல் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தவிட்டு குளத்தில் வாகனங்கள் மூலம் கிராவல் மண் அள்ளப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய், காவல் துறையினர் விரைந்தனர்.

அப்போது குளத்திற்குள் உரிய அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி, மினி வேன், டிப்பர் ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மணி (45), திருப்பதி (23), கனகராஜ்(25) ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க : 'ஆசிரியரை தெய்வங்களாகக் கருதுவதால் போலி சான்றளித்து பணியில் சேர்ந்தவருக்கு கருணை காட்ட முடியாது' உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details