தமிழ்நாடு

tamil nadu

'ஆளுநரும் முதலமைச்சரும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டிற்கு பலவீனம்' - அன்புமணி ராமதாஸ்!

By

Published : Jul 12, 2023, 5:09 PM IST

தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பலவீனமாக அமையும் என திருச்சி விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலமாக அதிகம் மாற்றப்பட்டுள்ளது. 48 விழுக்காடு விவசாய நிலம் தமிழ்நாட்டில், இது தற்போது 38 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் பாசன வசதிக்கு, எந்த திட்டமும் நீர் பாசன திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யவில்லை. நீர் பங்கீட்டில் நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா கடை பிடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் முத்துசாமி (மது விலக்குத் துறை), இந்த துறைக்கு அவர் வந்தது பராவாயில்லை என்று நினைத்தேன். ஆனால், அவர் பேசுவதைப் பார்த்தால் பயமாக உள்ளது. மது விற்பனை துறை என்று எண்ணிக் கொண்டு வருகின்றனர். திருமணத்தில் மது விற்பனை, சந்துக்கடை விற்பனை என மது விற்பனை துறையாக தமிழ்நாடு மது விலக்கு துறை செயல்பட்டு வருகிறது.

மது விற்பனை கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் நடந்துள்ளது. இதனால், மதுக் கடைகளை மூட மனம் இல்லாமல் 500 கடைகளை மட்டும் அரசு மூடியுள்ளது. தமிழ்நாட்டில் சந்துகடையுடன் சேர்ந்து 25ஆயிரம் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு எனப் பெயர் வந்துள்ளது. காலமாற்றம், பருவநிலை மாற்றம் மத்தியில் எதிர் காலத்தில் நாம் பெரிய நெருக்கடியில் உள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

மேகதாது விவகாரம் : ''கர்நாடகா சட்டப்பேரவையில் அணை கட்டப் போறோம் எனக் கூறி உள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது. இரண்டு மாநில நல் உறவைக் கெடுக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தூண்டி வருகின்றனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். கூலிப்படை கலாசாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். காவல் துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி தெரியும். கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள், எப்படி வருகிறது எல்லாம் தெரியும். ஆனால், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்த தலைமுறை அழிந்து கொண்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பணை கட்டினால் மணல் அல்ல முடியாது என்பதால் இரண்டு அரசுமே தடுப்பணை கட்ட முயற்சி செய்வதில்லை. அணையும் கட்டவில்லை, தடுப்பணையும் கட்டவில்லை. நீர் மேலாண்மைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அரசு விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும். திராவிட மாடல் என்று சொன்னால் போதுமா, நீங்கள் என்ன செய்து கொண்டு உள்ளீர்கள்?

முன்கூட்டியே ஒரு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள், கர்நாடகாவில் முதலமைச்சர் இது குறித்து பேச வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை’’ என்றார்.

இதையும் படிங்க:ஐ.நா., பாகிஸ்தானை மேற்கோள்காட்டிய அமலாக்கத்துறை - செந்தில் பாலாஜி வழக்கில் சுவாரஸ்யம்!

ABOUT THE AUTHOR

...view details