தமிழ்நாடு

tamil nadu

ஜல்லிக்கட்டில் காளை மிதித்து மற்றொரு காளையின் உரிமையாளர் உயிரிழப்பு

By

Published : Jan 17, 2020, 3:47 PM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த ஆவரங்காட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கிடையே காளை மிதித்து மற்றொரு காளையின் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bulls-owner-died-in-trichy-jallikattu-festival
bulls-owner-died-in-trichy-jallikattu-festival

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. இந்தப் போட்டியில் 900 காளைகள் பங்கேற்றுள்ளன.

இந்தப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், சுக்காம்பட்டி ராஜகிரியைச் சேர்ந்த பழனியாண்டி (55) என்ற காளை உரிமையாளர் தனது காளையுடன் இன்று கலந்துகொண்டார்.

அப்போது கலெக்‌ஷன் பாயிண்ட் என்ற மாடு பிடிக்கும் இடத்தில் தனது மாட்டைப் பிடிக்க கயிறு வீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பழனியாண்டி தடுமாறிக் கீழே விழுந்தார் .

அப்போது கண்ணிமைக்கும் நொடியில் மற்றொரு காளை பழனியாண்டியை மிதித்தது. இதில் படுகாயமடைந்த பழனியாண்டியை முதலுதவி சிகிச்சை மையத்திற்கு அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்ற நிலையில், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதே போன்று இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி சோழவந்தானைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார்.

இதையும் பிடிங்க...

ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த பெண் மாடு முட்டி படுகாயம்!

Intro:திருச்சி அருகே ஆவாரம் காட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை மிதித்து மற்றொரு காளை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.Body:திருச்சி:
திருச்சி அருகே ஆவாரங்காட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை மிதித்து மற்றொரு காளை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 900 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் ஒரு காளையின் உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்டம், சுக்காம்பட்டி ராஜகிரியைச் சேர்ந்த பழனியாண்டி (55) தனது காளையுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். அப்போது கலெக்சன் பாயிண்ட் என்ற மாடு படிக்கும் இடத்தில் தனது மாட்டை பிடிக்க கயிறு போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி பழனியாண்டி கீழே விழுந்தார் . அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றோரு காளை பழனியாண்டியை மிதித்தது. இதில் படுகாயமடைந்த பழனியாண்டியை முதலுதவி சிகிச்சை மையத்திற்கு அருகில் இருந்தவர்கள் தூக்கி சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details