தமிழ்நாடு

tamil nadu

காதலுக்கு உதவியதால் இளைஞர் கொலை!

By

Published : Mar 23, 2021, 10:44 PM IST

திருச்சி: நண்பரின் காதலுக்கு உதவியதால், மதுவில் விஷம் கலந்து கொடுத்து இளைஞர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விஷம் கலந்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி வாலிபர் கொலை
கொலை செய்யப்பட்ட இளைஞன்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த அரசுநிலைபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் வருண்(21). இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இக்காதலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் உதவியுள்ளார்.

இதனால் வருணின் தந்தை சேகர், அவ்வப்போது திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, திருமுருகனை மது அருந்துவதற்காக, வருணின் குடும்பத்தினர் அழைத்துச் சென்று, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர்.

தான் குடித்த மதுவில் விஷம் கலந்ததை அறிந்த திருமுருகன், உடனடியாக தன்னைக் காப்பாற்றுமாறு அவரது தந்தை கருப்பையாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து திருமுருகனை மீட்டு அவசர ஊர்தி மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து திருமுருகனின் இறப்பிற்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details