தமிழ்நாடு

tamil nadu

பயணிகளின் வருகை குறைவால் சில ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு!

By

Published : May 14, 2021, 8:18 PM IST

சென்னை: கரோனா பரவல் காரணமாக ரயிலில் பயணிக்க பயணிகள் அக்கறை காட்டாததால் குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Train was cancelled due to corona
Train was cancelled due to corona

கரோனா தொற்று பரவல் காரணமாக ரயிலில் வெளியூர் செல்வதை பயணிகள் முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதனால், குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `ரயிலில் பயணம் செய்ய பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06729 மதுரை - புனலூர் சிறப்பு விரைவு ரயில் மே 15 முதல் மே 31 வரையும், வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு விரைவு ரயில் மே 16 முதல் ஜூன் 1 வரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா, திருவனந்தபுரம் - மங்களூரு, எர்ணாகுளம் - காரைக்கால் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே மாத இறுதிவரை ரத்து செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details